பகுத்தறிவாளர் கழகம் நடத்திட்ட
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை
ஒரு தொகுப்பு
படிப்பறிவற்ற, பாமர மக்களைச் சென்றடை கின்ற வகையில் கொள்கைப் பிரச்சாரம் செய்வதில் திராவிடர் இயக்-கங்களுக்கு - குறிப்பாக திராவிடர் கழகத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. எந்தவித அரசியல் அதிகார நிலையினையும் எதிர்பார்க்காமல், கொள்கை வீச்சு மட்டுமே தம் உயிர் மூச்சு என பொது வாழ்க்கைப் பணி-யினை அமைத்துக் கொண்டு பணி-யாற்றும் பண்பில் கருப்புச் சட்டை இயக்கத்-தவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து கொள்-கைப் பிரச்சார அணுகுமுறையில் மாறு-பட்டவர்கள்.
மாறி வரும் காலச் சூழல், மக்கள் மனநிலை, பிரச்சாரம் ஏற்படுத்தும் எதிர் விளைவு இவை அனைத்தையும் உள்வாங்கி பல்வேறு தருணங்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வழி-காட்டுதலோடு பெரியார் இயக்கத்தினர் சமுதாயப் பணியாற்றி வருகின்றனர். ஓர் அமைப்பினைப் பொறுத்த அளவில் கொள்கை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், மக்களிடம் அவற்றைக் கொண்டு செல்கின்ற வழிமுறைகள், அணுகுமுறை அடிப்படைகள் சரியான முறையில் கைக்கொள்ளப் படவேண்டும்.
அறிஞர் அண்ணா பயன்படுத்திய அழகு தமிழை, அடுக்குமொழித் தமிழைவிட தந்தை பெரியாரின் பாமரத் தமிழ் மூலம் அதிகமாகவே கருத்துப் பிரச்சாரம் வலுப்பட்டது எனும் தமிழ்நாடு முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கூற்றும், நடிகர் திலகம் சிவாஜி கணே-சனின் நடிப்பாற்றல் மற்றும் நாடக வழி-முறையினை பாராட்டிப் பேசிய தந்தை பெரியார், நாம் பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள் மூலம் சாதிக்கும் கொள்கைப் பிரச்சாரத்தை விட சிவாஜி கணேசனின் ஒரு நாடகம் அதிகமாகவே ஏற்படுத்தும் எனக் கூறியதும், பெரியாரையே பார்த்தறியாத, கேட்டறியாத இளம் தலைமுறையினருக்கு பெரியார் திரைப்படத்தினை உருவாக்கி பெரியார் எனும் ஓர் இமயம் போன்ற பகுத்-தறிவுப் பிம்பத்தை மக்கள் முன்பு மீண்டும் நிலைப்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அணுகுமுறையும், கொள்கைப் பிரச்சார வழி முறைகளுக்கு உள்ள வலிமை-களை பறை சாற்றுவதாக உள்ளன.
கருத்தைக் கவர கண்ணைக் கவர-வேண்டும் என்பது பிரச்சார அணுகுமுறை-யில் ஓர் அடிப்படை யுக்தி. நல்ல கருத்து-களை அதன் சிறப்பு, லாபம் பற்றி தேடிக் கண்டுபிடித்து தெரிந்து கொள்ள முனை-பவர்கள் மிகச் சிலரே. தாங்கள் போகின்ற போக்கில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் சற்றுக் கூடுதல். அடுத்தவரின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி அவர் தம் மனதில் தாம் நினைப்பவற்றை நிறுத்திவைக்கும் அணுகு-முறைக்கு ஆட்படுபவரே பொதுமக்களில் அதிகப் பலராக உள்ளனர். இவ்வாறு அடுத்தவர் கவனத்தை தம் பக்கம் திரும்ப வைக்கும் அணுகுமுறையாக, கொள்கை விளக்-கக் கருவியாக கருஞ்சட்டைப் படையினர் பயன்படுத்தி வருகின்ற களம்தான் மந்திரமா? தந்திரமா? எனும் கொள்கைப் பிரச்சார நிகழ்ச்சி.
மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி இரண்டு பயன்பாட்டு தகவல்களை உள்ளடக்கிய அணுகுமுறை ஆகும். ஒன்று பார்ப்பவர் கவனத்தை, இன்னும் வலிந்து சொல்வ-தானால், கவனிக்காமல் சென்று விட்டவரின் கவனத்தையும் கூட ஈர்க்கும் தன்மையி-லானது. மற்றது தந்திரத்தை ஆன்மிகப் போர்வை போர்த்தி, பகுத்தறிவுக்குப் புறம்பான வெறும் பக்தி சாயம் பூசி, மக்களிடம் மந்திரம் எனச் சொல்லி தங்களுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி வரும் சாமியார் கூட்டத்தின் முக-மூடியினை கிழித்தெறிவதற்கான ஒரு பயன்பாட்டுத்தளம்.
மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்தக் கூடிய ஆற்றல் படைத்த பிரச்-சாரகர்கள் பெரியார் இயக்கத்தில் இருந்-தாலும், அடுத்த தலைமுறை பிரச்-சாரகர்களை உருவாக்கிடும் முறையில் பகுத்தறிவாளர் கழகம் இரண்டு நாள் மந்-திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறையை சென்னை பெரியார் திடலில் நடத்தியது. அக்டோபர் திங்கள் 8 மற்றும் 9 ஆம் நாள்களில் சென்னை மணி-யம்மை மன்றத்தில் நடத்தப்-பட்ட பயிற்சிப் பட்டறைக்கு திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் பரிந்துரைத்த 20 இளம் தோழர்கள் பயிற்சி-யாளர் களாகப் பங்கேற்றனர். நடத்தப்பட்ட நிகழ்ச்சி பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கான பட்டறை - பிரச்சாரக் கருவியதை அடித்து, வளைத்து, வார்த்து எடுக்கும் உலைக்கூடம். நிகழ்ச்சியைப் பார்வையாளர் களுக்குக் காட்டவேண்டும் என்பது பட்டறையின் நோக்கமல்ல. எனவே இருபது இனிய, இணக்-க-மான பயிற்சியாளர் எண்ணிக்கையாகவே இருந்தது.
பயிற்சியினைத் தொடங்குவதற்கு முன் ஓர் இரங்கல் செய்தி. சீரிய பகுத்தறிவாளரும், இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் நிறுவனரும், அறிவியல் விளக்கங்களுடன் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை மேற்-கொண்டவருமான பசவ பிரேமானந்த் தனது 79 ஆம் வயதில் உடல் நலிவு காரண-மாக கோவை- போத்தனூரில் 04-.10.-2009 அன்று காலமானார். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை அறிவியல் விளக்கங்களுடன் நடத்தும் அணுகுமுறையினைக் கைக்-கொண்டவர். பெரியார் இயக்க மேடையி-லேயே பல முறை மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை நடத்தியவர் பிரேமானந்த். நாத்திகப் படையின் நல்ல தளபதியினை இழந்தோமே! என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் செய்தி அனுப்பியது பிரேமானந்த் அவர்களது செயல் தன்மையினை பறை-சாற்றியது. அந்த நாத்திக மேதைக்கு வீர-வணக்கம் செலுத்துகின்ற வகையில் இரண்டு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி கடைப்பிடிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், பயிற்சியாளர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து கற்றுத் தரும் வித்தைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தெரிந்து கொண்ட வித்தைகளை செய்து ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்-டும். காட்டிடும் பகுத்தறிவுக் கருத்தினை பெருக்கிக் கொள்ள வேண்டும் என இளம் பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பயிற்சிப் பட்டறையில் பெரும்பாலான பயிற்சி வகுப்புகளை மந்திரமா? தந்திரமா? வல்லுநர் பேராசிரியர் நரேந்திர நாயக் நடத்தினார். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான இவர் அதன் நிறுவனர் பிரேமானந்த் அவர்களின் அணுக்கத் தோழராக இருந்தவர். நாடு முழுவதும் கூட்டமைப்பின் பணிகளுக்காக அடிக்கடி சுற்றுப் பயணம் செய்வதோடு மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி-யினை பரந்து-பட்டு நடத்தி வருகிறார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றதால் பல மாநில மக்களுக்கும் நிகழ்ச்சி-யினை நடத்தி வருகிறார். நல்ல பயிற்றுநர். சிறந்த பகுத்தறி-வாளர். பிரேமானந்த் அவர்களைக் கடைசி-யாக அவர் பார்க்கச் சென்ற பொழுது (இறப்-பதற்கு இரண்டு வாரங்-களுக்கு முன்பு) தன்-னிடம் ஒரு வேண்டு-கோள் விடுத்ததாக நாயக் அவர்கள் குறிப்-பிட்டார். தான் இறந்து-போன செய்தி அறிய நேரிடும்பொழுது, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் வெளியூரில் நாயக் அவர்கள் இருந்-தால், ஏற்றுக் கொண்ட பணியினை விட்டு-விட்டு தன் உடலைப் பார்க்க வரக்-கூடாது. திட்டமிட்டவாறு பணி-யினை முழு-வதும் முடித்துவிட வேண்டும். தன்னுடைய இறப்பு பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை எந்த விதத்திலும் தடைப்படுத்தி விடக் கூடாது என்பதை பிரேமானந்த் அவர்கள் நாயக்கிடம் விடுத்த வேண்டு-கோள். பிரேமானந்த் மறைவுச் செய்தி பிரச்-சாரப் பணிக்காக, ஒரிசா மாநிலம் புவனே-சுவரத்தில் நாயக் இருந்த நேரத்தில் அறிய நேரிட்டது. மன வேதனையுடன் நிகழ்ச்சி-யினை முடித்துக் கொண்டு சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும், தாம் ஏற்றுக் கொண்ட இந்த மந்திரமா? தந்திரமா? பயிற்சிக்கு வருகை தந்தார். கடமை தவறாமல் நிகழ்ச்சிக்கு வருகை தந்து பயிற்சிப் பட்டறை வகுப்பு-களை சிறப்பாக நடத்தியதன் மூலம் தனது பகுத்தறிவுப் பணி முன்னோடியான பிரே-மானந்த் அவர்களுக்கு தனது வீர-வணக்கத்தினைச் செலுத்தினார்.
பலதரப்பட்ட தந்திர நிகழ்ச்சிகளை புதிதாக அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகளை ஆரம்ப நிலையிலான பயிற்சியாளர்களுக்கு அவர்தம் மனம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் விதத்தில் வித்தையினைக் கற்பித்தார். பயிற்சி நடத்திய முறையானது பேச்சு விளக்கம் (றிக்ஷீணீநீவீநீணீறீ) மற்றும் செயல்விளக்கம் (ஜிலீமீஷீக்ஷீஹ்) உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் பயிற்சி-யாளர் களை செயல்முறைக்கு ஆளாக்கும் விதத்திலும் அமைந்திருந்தது.
நண்பகல் உணவுக்குப் பயிற்சியாளர், பயிற்றுநர் மற்றும் பார்வையாளர் அனை-வருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிற்பகல், திராவிடர் கழக கலைத்துறைச் செயலாளர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் வித்தகர் இனமானநடிகர் மு.அ.கிரிதரன் அவர்கள் நடத்தினார். தனக்கே உரிய கம்பீரக் குரலில் நிகழ்ச்சிகள் நடத்திவரும் பட்டறிவின் துணை கொண்டு வகுப்பினை நடத்தினார்.
மாலை 5 மணிக்கு முதல்நாள் பட்டறை முடிந்தது. வெளியூரிலிருந்து வருகை தந்த பயிற்சியாளர் களுக்கு பெரியார் திடலில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்-டிருந்தது.
பட்டறையின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு துவங்கின. விடுபட்ட வித்தைகளை பேராசிரியர் நரேந்திர நாயக் நடத்தினார். நண்பகல் உணவிற்குப் பின்னரும், சில வகுப்புகளை நடத்தினார். பின்னர் பயிற்சியாளர்கள் வெறும் வித்தை-களைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பகுத்-தறிவு, அறிவியல் தொடர்பான செய்தி-களையும் சேகரித்து தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படை-யில் பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் தி.பெரியார் சாக்ரடீஸ் உரையாற்றினார். பயிற்சியாளர்களுக்கான குறிப்புகள் அடங்கிய விவரங்களையும் சுருக்க-மாக ஆக்கிய பதிலான சிறு அச்-சடிப்பினை வழங்கினார். பயிற்சியாளர்கள் தாமே நிகழ்ச்சியினை நடத்துவதற்கு முனைப்பாக இருக்க பெரியார் சாக்ரடீஸ் தந்த விவரங்கள் உதவியாய் இருந்தன.
நிறைவு வகுப்புகளில் இயக்க மேடையில் பலமுறை மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி-யினை நடத்தி வரும் ஈட்டி கணேசன் மற்றும் காஞ்சி கதிரவன் ஆகியோர் பயிற்சி-யாளர் உள்ளம் கவரும் வண்ணம் உரை-யாற்றினார். நிகழ்ச்சி நடத்தும் பொழுது ஏற்றம், இறக்கம், பாட்டுப் பாடுதல், முழக்க-மிடுதல், என பார்வையாளர் கவனத்தைத் தம் பக்கம் வைத்திருப்பதற்கான யுக்திகளை வழங்கினார். பட்டறை வகுப்புகளின் முடிவில் ஏறக்குறைய முக்கால்வாசி நிகழ்ச்சி நடத்து-பவர்களாக பயிற்சியாளர்கள் மாறிவிட்டனர். தம் முயற்சி, தொய்வில்லாமல் நிகழ்ச்சி நடத்திப் பார்த்தல் மூலம் தங்களை தாங்கள் முழுமையான நிகழ்ச்சி நடத்துபவர் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.
பட்டறையின் நிறைவு நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்து சிறப்-பித்தார். பயிற்சிப் பட்டறை பற்றிய குறிப்பு, நடத்தப்பட்ட வகுப்புகள், நடத்திய வல்லு-னர்கள், பயிற்சியாளர்கள் அறிமுகம் ஆகிய-வற்றை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தொகுத்து வழங்கினார்.
பட்டறை வகுப்புகளை நடத்திய பேராசிரியர் நரேந்திரநாயக் அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினார். பார்வையாளராக வருகை தநத் இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் யு.கலநாதன் அவர்களுக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்பு பயிற்சியாளர்கள் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டினர். ஒவ்வொரு-வர் வித்தையினை செய்து காட்டும் பொழுது நெறிப்படுத்தும் (திவீஸீமீ ஸீவீஸீரீ) வகையில் ஆசிரியர் அவர்கள் அறிவுரை வழங்கினார். தமிழர் தலைவரின் நிறைவுரைக்கு முன்பாக சில மணித்துளிகள் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழர் தலைவர் தனது நிறைவுரையில் _மாஜிக் நிபுணர்களுக்கும், நமது பிரச்சாரத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் தோழர்களுக்கும் வேறு-பாடு உள்ளது. மாஜிக் நிபுணர் தந்திரத்தின் பின்னால் உள்ள விவரங்களைக் கூற-மாட்டார். ஆனால் நிகழ்ச்சி நடத்தும் பகுத்-தறிவாளர்களாகிய நீங்கள் தந்திரத்தின் பின்னணியினை சுருக்கமாக எடுத்துச் சொல்லி எல்லாம் தந்திரமே இதில் மந்திரம் ஏதும் இல்லை என்று விளக்க வேண்டும். தன் முயற்சி, நிகழ்ச்சியினை நடத்த பழகிக் கொள்ளும் விதம், விடா முயற்சி, பார்வையாளர்களை கவரும் விதமாக பேச்சினை அமைத்துக் கொள்ளல், நிகழ்ச்சி மற்றும் ஊர் பற்றிய செய்திகளை தொடர்பு படுத்திப் பேசுதல் எனும் அணுகுமுறையில் சிறந்த மந்திரமா? தந்திரமா? வல்லுநர்களாக பயிற்சியாளர்கள் வரமுடியும் என உற்சாகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.
பயிற்சி எடுத்துக் கொண்ட தோழர்-களான ஒரத்தநாடு, மண்டலக்கோட்டை - த.பர்தீன், பழனி- புது ஆயக்குடி அ.-அழகிரிசாமி, மதுரை-கோ.புதூர். பா.பிரதாப், கிருட்டினகிரி- அகரம் நா.சதீஷ்குமார், ஊற்றங்கரை - ராம.சகாதேவன், பேராவூரணி - வளப்பிரமன்காடு சோம. நீலகண்டன், கிருட்டிணகிரி- கீழ்சோமன்பேட்டை போ.செந்தில்குமார், சென்னை- பட்டாபிராம் ஜீ.நாகராஜ்,. குடியாத்தம் - மோ. அறிவரசன், சென்னை- திருநின்றவூர் ர.பிரேம் குமார், கொருக்குப்பேட்டை - செந்தமிழ் சேகுவேரா, உடுமலை அ.ப. நடராசன், கோவை - மா.சந்திரசேகர், வெள்ளலூர்- சு.ஜீவானந்தம், கணபதி - ஜீ.சதீஷ்குமார், சென்னை சூளை-மேடு -எம்.ஏ.மணி, மதுரை-மணிமாறன், சென்னை-வியாசர்பாடி த.மரகதமணி, சென்னை- இறைவி, கூடுவாஞ்சேரி - மா. இராசு, ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். இயக்கத்தவரால் பயன்படுத்தப்படக் கூடியவர்கள். பயிற்சியாளர் களைப் பரிந்துரைத்த மாநில, மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா-ளர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இயக்கப் பிரச்சாரப் பணியின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு ஆக்கம் கூட்டிய இப்பயிற்சிப் பட்டறையினை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், வடசேரி இளங்கோவன், இரமணிதேவி, துணைத் தலைவர்கள் புதுவை மு.ந.நடராசன், தகடூர் தமிழ்ச்-செல்வி, மாநிலச் செயலாளர்கள், பெரியார் சாக்ரடீஸ், பிரின்ஸ் என்னாரசு பெரியார், மாவட்ட பொறுப்பாளர்கள், பேராசிரியர் மு.நீ.சிவராசன், சி.செங்குட்டுவன், மா.அ.செல்வராசன், இரா.தமிழ்ச் செல்வன், தூத்துக்குடி மனோகரன் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை வெறும் பயிற்சி முகாமாக மட்டுமல்ல, இயக்கப் பிரச்சாரப் பணி அணுகுமுறை பற்றிய ஓர் ஆய்வு முகாமாக விளங்கியது. பட்டறையின் விளைச்சல் இயக்கத்துக்குப் பரந்துபட்டு பயன்படவேண்டும். இயக்கப் பொறுப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெரியார் கொள்கையின் பிரச்சாரப் பணி பெருகட்டும். தமிழர் தலைவர் ஆசிரியரின் அணுகுமுறை ஆக்கம் சேர்க்கட்டும். பயிற்சிப் பட்டறையின் பயன்பாடு பரவட்டும்.
Sunday, October 18, 2009
Saturday, August 08, 2009
பெரியார் இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு

பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கம்
இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு மதுரை மாநகரில், 02.08.09 ஞாயிறன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கில் சொற்பொழிவாற்றிய கழக சட்டத்துறை தலைவர் கி. மகேந்திரன் நமது இயக்கத்தின் அச்சாணி விடுதலை நாளேடு என்று முழங்கியதுடன் அதற்கான ஆதாரங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டார்.
விடுதலை நாளேடு தொடங்கப்பட்ட நாள் முதல் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ஆச்சாரியார் ஆட்சியில் கொடுக்கப்பட்ட தொல்லைகளையும் சுட்டிக் காட்டிய அவர்,
மனிதர்களுடன் மற்ற விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் தந்தை பெரியார் கொள்கை விஷயத்தில் சமரசம் செய்யாது உறுதியாக இருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.
நட்டத்தில் இயங்கிவந்த விடுதலை நாளேட்டிற்கு பொறுப்பேற்று ------------- எதையும் எதிர்பாராமல் ------------- நடத்துவதற்கு முன்வந்த தமிழர் தலைவர் அவர்களின் தூய தொண்டறத்தையும் அவரை வரவேற்று தந்தை பெரியார் கூறிய பெருமிதக் கூற்றையும் விளக்கும் பொழுது கூட்டத்தினர் மிகவும் வியப்படைந்தனர்.
இந்தி எதிர்ப்பை மக்கள் இயக்கமாக மாற்றியது; முதலாவது அரசியல் சட்டதிருத்தத்திற்கு காரணமாக இருந்தது, எம்.ஜி. ஆர். ஆட்சியின் பொழுது இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு என்ற கேட்டினை எதிர்த்து விடுதலை நாளேடு நடத்திய கருத்துப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலிலும் எம்.ஜி.-ஆரிடமும் ஏற்பட்ட மாற்றங்கள்; 31சி. சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு விடுதலை ஆற்றிய பணிகள் போன்றவற்றை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு அவையோரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார்.
கருத்துத் துளிகளில் சில.
1. அரசியலை பொதுவாழ்க்கையாகக் கொண்டவர்களுக்கு கொள்கை வழிகாட்டியாகத் திகழ்வது விடுதலை நாளேடு.
2. 1920 - 25 காலகட்டங்களில் இந்திய பத்திரிகைகளில் 25 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்தது அதிலும் குறிப்பாக 20 விழுக்காடு பத்திரிகைகள் திராவிட இயக்கப் பத்திரிகைகளாக இருந்ததற்கு காரணம் தந்தை பெரியார்.
3. எம்.ஜி. ஆருக்கு தோல்வியை ஏற்படுத்திய ஒரே பத்திரிகை விடுதலை நாளேடு.
4. விடுதலை செய்த சமூகப் புரட்சியை வேறு எந்தப் பத்திரிகையும் செய்யவில்லை.
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் க. அழகர் தலைமைவகிக்க தென்மாவட்ட பிராச்சாரக்குழு தலைவர் தே. எடிசன்ராசா, கழக மாவட்டத் தலைவர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க ப.க. மாவட்டத் தலைவர் சுப. முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்த ப.க. மாவட்டச் செயலர் பா. சடகோபன் நிகழ்ச்சியினை ஒருங்-கிணைக்க, தோழர் எம். கனி அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புறநர் மாவட்டத்தலைவர் மா. பவுன்ராஜா மாவட்டச் செயலர் நா. முருகேசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அ. காசிவிசுவநாதன், செயலர் பெரி. காளியப்பன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச. மஞ்சுளா, மாவட்ட துனை தலைவர் ச. இராஜேந்திரன், இளைஞரணி செயலர் க. பிச்சைப்பாண்டி பொதுக்குழு உறுப்பினர் எஸ். முனிய-சாமி வழக்கறிஞர் பி.கே. இரஜேந்திரன், மற்றும் ஏரளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
----------------செய்தி தொகுப்பு -- ஒளித்திரள் ....நன்றி:-"விடுதலை" ஞாயிறுமலர் 8-8-2009
Monday, July 13, 2009
அகலட்டும் ஆரிய மாயை

பகுத்தறிவாளர் கழகச்செய்தி
மதுரை, திருவாரூர் மாவட்டத்தில் கருத்து மழை
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை நியூ காலேஜ் அவுஸ் உணவு விடுதியில் கருத்தரங்கம் 5.7.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட தி.க. தலைவர் வே. செல்வம் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் போற்றி ,போற்றி வாசகங்களை இசையோடு பாடினார்.பின்னர் ஆரிய மாயை அகலவேண்டிய தேவைகளைக் கூறினார். மாவட்ட ப.க.-செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார்.-மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் கி.மகேந்திரன் தொடக்க உரை ஆற்றினார்.
ஆரியந்தான் சாதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.ஆரிய மாயை அழிந்தால் சாதியம் ஒழியும் என்றார். மாநில ப.க. தலைவர் வா.நேரு முன்னிலை வகித்து பேராசிரியர் அருணன் எழுதிய "காலந்தோறும் பிராமணியம் "என்னும் நூலை ஆய்வு செய்தார். பின்னர் நீதிபதி (பணி நிறைவு) பொ. நடராஜன் "அகலட்டும் ஆரிய மாயை" என்னும் தலைப்பில் சிறப்பு உரையாற்றினார். தனது உரையில் ஏன் இந்த காலகட்டத்தில் ஆரிய மாயை பற்றிப் பேசவேண்டும் என்பதற்கு பல்வேறு நடப்புச் செய்திகளைக் கூறினார். ஆரிய மாயையில் அறிஞர் அண்ணா குறிப்பிட்ட 'சிண்டு முடிந்திடும் நரிகளாக' பார்ப்பனர்கள் இன்றைக்கும் இருப்பதை ஈழப்பிரச்சனையில் நாம் அறிய முடிந்ததை எடுத்துக்கூறினார். நமமை இன்னும் பார்ப்பனர்கள் அடிமை நிலையில் வைத்திருப்பதை எடுத்துக்காட்டினார்.
முடிவில் கு.கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் ப.க. மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மா.பவுன்-ராசா, சிவகங்கை பொறியாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவர் முனியசாமி, வழக்-கறிஞர்கள் பி.கே.இராசேந்திரன், தமிழ்மணி, கணேசன், மாவட்ட இளை-ஞரணிச் செயலாளர் க.பிச்சைப்பாண்டி, தலைமைக்கழக பேச்சாளர் வேங்கை-மாறன், சுசிலா- வேங்கைமாறன், பேரா-சிரியர் இ.கி.இராமசாமி, எழுத்தாளர் விசுவநாதன், விடுதலை செல்வம், போட்டோ ராதா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக அறிவார்ந்த கருத்தரஙகம் 6.07.2009 திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வா. நேரு தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் க.முனியாண்டி வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட தி.க. தலைவர் காயர்மித்ரா எஸ்.எஸ்.மணியம்,தி.க. துணைப்பொதுச்செயலாளர் இரா.குணசேகரன், ஹோட்டல் செல்வீஸ் நிறுவனர் ஏ.கே.எம்.காசிநாதன், ப.க. பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், திருவாரூர் நகர் மன்றத்தலைவர் கு.தென்னன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.பி.சுப்ரமணியன்,தி.க.மாவட்ட செயலாளர் சு.சிங்காரவேலு, தி.க. மாவட்ட மகளிரணி தலைவர் சுப்புலட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் 1970ல் தொடங்கினார்கள். அன்றுமுதல் இன்றுவரை தமிழர் தலைவர் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலராக இருந்து வழி நடத்தி வருகின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தை ஆரம்பித்து வைக்கும்போது இன்றுதான் மனிதர்கள் கழகத்தை தொடங்கிவைக்கிறேன் என்று கூறியதை நினைவு கூர்ந்து பல்வேறு சம்பவங்களைக் கூறி தொடங்கி வைத்தார். சிறப்புரையாற்ற வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களூக்கும், மற்ற விருந்தினர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக "தந்தை பெரியாரின் தொண்டறம்" என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை-யாற்றினார். முதலில் அறம் என்றால் என்ன என்பதை திருக்குறளை வைத்து விளக்கினார். "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறன்"என்பதனை எடுத்துக்கூறி தந்தை பெரியார் இத்தகைய அறத்திற்கு உரியவர் என்பதை விளக்கினார். பார்ப்பனர்களின் அறம் என்பது பிச்சை வாங்குவது ஆனால் நம்மது அப்படி-யல்ல என்றார். தந்தை பெரியாரின் துணிவை விளக்கினார். புரட்சிக்-கவிஞரின் "அவர்தாம் பெரியார் என்னும் பாடல் எழுதப்பட்ட சூழல், கருத்துச்செறிவினை விளக்கினார். இனி வரும் உலகத்தில் அய்யா சொன்ன பல கருத்துக்கள நடைமுறையில் இன்றைக்கு இருப்பதை எடுத்துக் காட்டினார்.
புலவர் இராமநாதன் அவர்களின் "பெரியாரியல் "புத்தகத்தை எடுத்துக்காட்டி ஆசிரியர் அவர்கள் பாடம் நடத்தினார். புதியவர் பலரும் ,மாணவர்களும் பங்கேற்ற இந்த அறிவார்ந்த கருத்தரங்கம் கேட்பாளர்களுக்கு மிகப்பெரிய அறிவு விருந்தாய் அமைந்தது
முடிவில் திருவாரூர் மாவட்ட ப.க.செயலாளர் இரா.சிவக்குமார் நன்றி கூறினார். நகர் முழுவதும் விளம்பரத் தட்டிகள் கருத்தரஙகத்தைப் பற்றி வைக்கப்பட்டிருந்தன. கருத்தரஙகத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்-றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டது. நிறைய மாணவர்களும்,பள்ளி ஆசிரியர்-களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தி.க .பொறுப்பாளர்கள், ப.க.பொறுப்பாளர்கள், தி.மு.க. நிர்வாகி-கள்பலரும் கலந்துகொண்டனர்.
Saturday, July 04, 2009
நாம் பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை!
பகுத்தறிவாளர் கழகச்செய்தி
மதுரை மாநகர் மாவட்ட கருத்து மழை
மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை திலகா உணவு விடுதியில் கருத்தரங்கம் 7.6.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட தி.க. அமைப்பாளர் ச. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட் தி.க. தலைவர் வே.செல்வம், மாநில வழக்குரைஞர் அணி தலைவர் கி.மகேந்திரன்,மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி (பணி நிறைவு) பொ. நடராஜன் தொடக்க உரை ஆற்றினார். திராவிடர் கழகத்தலைமைக் கழகப்பேச்சாளர் சீனி.விடுதலை அரசு "எதற்காக பிராமணன்?" என்னும் தலைப்பில் உரையாற்றினார். நாம் பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்வதில்லை,. எங்கே பிராமணன் என்று தொடர் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நடத்தும் பார்ப்பனர்களின் வஞ்சகத்தன்மையை புரிந்து கொள்ளும்வண்ணம் எதற்காக சமூகத்தில் பார்ப்பனர்கள் என்று உணரும்வண்ணம் இந்த தலைப்பை மதுரை ப.க. தோழர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்று சொல்லி,மன்னர்களை,ஆட்சிகளை எல்லாம் தங்கள் இன மேன்மைக்கு எப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள் என்ற சரித்திர நிகழ்வுகளை பட்டியலிட்டார். புராணங்கள், இதிகாசங்கள் நம்மை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதனை ஆதாரங்களோடு, பார்ப்பனர்கள் எழுதிய புத்தகங்களின் வாசித்துக்காட்டி எடுத்துரைத்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கேட்பாளர்களைத் தன்வயப்படுத்தி,தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உழைப்பை எடுத்துவைத்து, இன்றைக்கும் இருக்கும் பார்ப்பனர்களின் அதிகார மய்யங்களை எடுத்துரைத்தார். முடிவில் சோ.சுப்பையா நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர், தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
********************************************************
மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக , மதுரை உற்பத்தியாளர் திறன் அரங்கில் கருத்தரங்கம் 3.5.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் சுப.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தி.க. தலைவர் வே.செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வைகை வெளியீட்டகம் ஆ.விசுவநாதன் மற்றும் நீதிபதி (பணி நிறைவு) பொ. நட-ராஜன் தொடக்க உரை ஆற்றினர்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்-திரன்-"பெரியாரும் நீதியும்" என்னும் தலைப்பில் உரையாற்றினார் .தனது உரையில் நீதி என்பது பார்ப்பனர்களால் எப்படி தமிழர்களுக்கு அநீதியாக இருந்தது, அதனை மாற்ற தந்தை பெரியார் எப்படி அஞ்சாமல் போரிட்டார் என்னும் கருத்தைக்கூறி அதற்கான பல்வேறு சம்பவங்களை எடுத்துரைத்தார். 1957 சாதி ஒழிப்பிற்காக அய்யா செய்த போராட்டத்தை விவரித்தார். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டை ஒற்றி தமிழர் தலைவர் நடத்திய போராட்டங்களை ,அரசமைப்பு சட்ட திருத்தங்களை எடுத்துரைத்தார். முடிவில் ஆரப்பாளையம் நாகராசன் நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர், தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
********************************************************************
மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக, மதுரை உற்பத்தியாளர் திறன் அரங்கில் கருத்தரங்கம் 1.3.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.20 முதல் 8.20 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாநில ப.க. தலைவர் வா. நேரு தலைமை தாங்கினார். மாவட்ட ப.க.செயலாளர் பா.சடகோபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தி.க. தலைவர் வே.செல்வம், மாநில தி.க. வழக்குரைஞர் அணி தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்திரன், தென்மாவட்ட தி.க.பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தகடூர் தமிழச்செல்வி 'அறிவியலும் பெரியாரியலும் " என்னும் தலைப்பில் உரையாற்றினார்.தனது உரையில் அறிவியலும் பெரியாரியலும் ஒன்றே என்றார்.தந்தை பெரியார் 'இனி வரும் உலகம் 'என்னும் நூலில் சொன்ன பல கருத்துகள் இன்றைக்கு நடைமுறை ஆகியிருப்பதை எடுத்-துரைத்தார். கிரகணம் பற்றி பல்வேறு மூடக்கருத்துகள் இருப்பதை எடுத்துரைத்த அவர், தமிழர் தலைவர் அவர்கள் அதனை முறியடிக்கும் விதத்தில். மாணவ மாணவிகளோடு உணவினை சாப்பிட்டு மூட நம்பிக்கை முறியடித்த விதத்தைச் சொன்னார். முடிவில் க.பிச்சைப்பாண்டி நன்றி கூறினார். மிகச்சரியாக 6.20க்கு ஆரம்பிக்கப்பட்டு 8.20க்கு கூட்டம் முடிவுற்றது. திரளாக தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
---------------"விடுதலை" ஞாயிறுமலர் 4-7-2009

Thursday, June 26, 2008
சென்னை ப.க. மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடு

கலைஞருக்குச் சமூகநீதி விருது அளிக்கப்பட உள்ளது
தலைசிறந்த பகுத்தறிவாளரான பால்கர்ட்ஸ் பங்கேற்கிறார்
கூட்டுக்குழு மனப்பான்மையுடன் பணியாற்றுவீர்!
தமிழர் தலைவர் உரை
சென்னை, ஜூன் 9 7.9.2008 அன்று சென்னையில் நடக்க இருக்கும் மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்பு மிகு கலைஞர் அவர்களுக்குச் சமூகநீதி விருது வழங்கப்படும் என்றும், அமெரிக்காவின் தலைசிறந்த பகுத்தறிவாளர் பால்கர்ட்ஸ் பங்கேற்பார் என்றும் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி தெரிவித் தார்.
சென்னை பெரியார் திட லில் நேற்று (8.6.2008) மாலை நடைபெற்ற மாநிலப் பகுத்தறி வாளர் கழகக் கலந்துரை யாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட் டதாவது:
சென்னையில் செப்டம்பர் 7-இல் நடக்க இருக்கும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாட்டுக்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலம் தழுவிய அளவில் நீங்கள் எல்லாம் வருகை தந்தது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் மாநாடு சிறப்பாக வெற்றிகரமாக நடைபெறும் என்பதற்கான நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டு இருக்கிறது.
மாநாடு வெற்றி பெற இரு விஷயங்கள் முக்கியம். ஒன்று நிதி! இரண்டாவது நிதி!! மூன்றா வது நிதி!!! அடுத்தபடியாக செயல்! செயல்!! செயல்!!! இந்த இரண்டும் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம் இருக்கும்.
ஒரு முக்கியமான கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. நாட்டை மீண்டும் மதவாத சக்திகள் தலைகீழாகப் புரட்டும் ஒரு கால கட்டத்தில் மக்கள் மத்தி யில் பகுத்தறிவு எழுச்சியை உண்டாக்கும் மாநாடு இது. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு திருப்புமுனை மாநாடாக நடைபெறப் போகிறது.
மதச் சார்பற்ற தன்மைக்கு ஊக்கம் கொடுக்கும் பலம் சேர்க்கும் மாநாடு இது.
கலைஞருக்குச் சமூகநீதி விருது
மாநாட்டில் நமது தமிழக முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர் கள் பங்கேற்க இருக்கிறார் பெரியார் பன்னாட்டு மையத் தின் சார்பில், நம் முதல் அமைச்சருக்கு ``சமூகநீதி விருது அளிக்கப்பட உள்ளது.
பால்கர்ட்ஸ் பங்கேற்பு!
தலை சிறந்த பகுத்தறிவாள ரான அமெரிக்கப் பேராசிரியர் பால்கர்ட்ஸ் மாநாட்டில் பங்கு கொள்ள இருப்பது பெருமைக்குரியதாகும். அவர் வைத்திருக்கும் நூலகமே இந் தப் பெரியார் திடல் அளவுக்கு இருக்கும்.
அத்தகைய ஒருவர் நம் மாநாட்டுக்கு வருவது என்பது சாதாரணமானதல்ல.
மாநாட்டுக்கு இடையில் இன்னும் மூன்று மாதங்கள் தாராளமாக இருக்கின்றன. சிறப்பாக ஏற்பாடுகள் செய்ய லாம். அதிக நாள் இருக்கிறதே - பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.
சுவர் எழுத்துப் பிரச்சாரம் நடக்கட்டும்!
நீங்கள் இங்கிருந்து சென்று ஊருக்குப் போன உடனேயே மாநாடு பற்றி சுவர் எழுத்து விளம்பரங்களைத் தொடங் குங்கள்.
நம்மிடம் குழு மனப்பான்மை இல்லை; மாறாகக் கூட்டுக் குழு மனப்பான்மை உண்டு. நம் செயல்பாடுகள் மூலம் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். நான் என்பதைவிட நாம் என்பதே கூட்டுக் குழு வுடன் பணியாற்றுவதற்குப் பயன்படும்.
பத்து லட்சம் ரூபாய் மாநாட்டுக்குத் தேவைப்பட லாம் ஆயிரம் ரூபாய்க் கொடுக் கக் கூடிய ஆயிரம் பேர்களை அடையாளம் கண்டாலே போதும் இது ஒன்றும் பெரிய காரியமல்ல - தன்னம்பிக்கை வேண்டும் அவ்வளவுதான்.
நம் மாநாடு நடக்க இருக் கும் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி மலரவிருக்கின்றது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற சட்டம் செயல்பாட்டுக்கு வரும்கால கட்டம் அது.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் புரட்சி மணத்தை நுகர இருக்கிறோம்.
தென் அமெரிக்காவில் பெரியார்!
அண்மையில் தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில், கப்பலிலேயே அகில உலக மனிதநேய பகுத்தறிவு மாநாடு நடைபெற்றிருக்கிறது. அம்மாநாட்டிற்கு என்னையும் அழைத்திருந்தனர். நான் செல்வதாகவும் இருந்தேன். வேறு பல பணிகள் காரணமாக செல்லயியலவில்லை. பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்கு நர் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களைப் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டேன் அவரும் அவ் வாறு சென்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய 'விடுதலை'யில் அது வெளி வந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கின்றன. சென்னையில் நாம் நடத்தயிருக்கும் மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக, வெளிநாடுகளி லிருந்து வருவோர் தந்தை பெரியாரைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த மாநாட்டின் மூலம் ஏற்படும்.
பகுத்தறிவுக் கண்காட்சி யையும் நடத்த வேண்டும். எல்லா வகையிலும் சிறப்பாக நடத்துவோம் - ஒத்துழைப்புத் தாருங்கள் என்று குறிப்பிட்டார்.

Thursday, June 12, 2008
பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்
பகுத்தறிவாளர் கழகத்தின் கம்பீரமான பணிகள்!
அரசு ஊழியர்கள் என்றால் அவர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடலாம்; மதச் சார்பற்ற அரசின் பணியாளர்களாகயிருந் தாலும் வெளிப்படையாக மத நடவடிக் கைகளில் ஈடுபடுவதில் தடையிருப்பதில்லை.
மதச் சார்பற்ற அரசில் நிகழ்ச்சிகள் எல்லாம்கூட இந்து மத அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பூமி பூஜை என்ற பெயரால் இந்து மதச் சடங்குகள், இன்னோரன்ன மதவழிச் செயல்பாடுகள் தங்குத் தடையின்றி நடைபெற எவ்விதத் தடையும் இல்லை என்பது தான் நிலைமை இந்த நிலையில் அரசு - ஊழியர்கள், அலு வலர்கள், அதிகாரிகள் ஏன் பகுத்தறிவின் அடிப்படையில் செயல்படக் கூடாது?
மனிதன் என்றாலே பகுத்தறிவு வாதிதானே? இந்தச் சிந்தனையின் அடிப் படையில் தோற்றுவிக்கப்பட்டதுதான் பகுத்தறிவாளர் கழகம்.
1970 செப்டம்பர் 6-ஆம் தேதியன்று சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலை வாணர் அரங்கம்) தந்தை பெரியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதுதான் பகுத்தறி வாளர் கழகம் தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலாளர் திரு. கா.து. நடராசன் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கினர்.
மாண்புமிகு அமைச்சர் டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.
தந்தை பெரியாரின் நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்து அறிவுரை ஆற்றிய தந்தை பெரியார் அவர்கள் கழகத்தின் வளர்ச்சிக்காக கழகத்தின் தலைவர் திரு. சி.டி. நடராசன் அவர்களிடம் 1000 ரூபாயை நன்கொடையாக அளித்தார்கள். தொடர்ந்து அய்யா அவர்கள் பேசுகையில் கழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை பல வகையில் வலிவுடன் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரசார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறிவாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண்டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.
தமிழ் நாடெங்கும் பகுத்தறிவாளர் கிளைகள் தொடங்கப்பட்டன தொடக்க முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.
பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப்பட்டது. (1972 மே 27), பகுத்தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத்திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானிகள் படங்களையெல்லாம் அறிஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.கூறினார்கள். கழகம் தனக்கென ஆங்கில ஏடு ஒன்று விரைவில் தொடங்க வேண்டிய அவசி யத்தை வலியுறுத்தினார்கள். மேலும் துண்டுப் பிரசுரங்கள், மலிவுப் பதிப்புகள் வெளியிடுதல். கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்கள் இவற்றுக்கு ஏற்பாடு செய்தல், பிரச்சார நாடகங்கள் பலவற்றை நடத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் விரைந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். மேலும் பகுத்தறி வாளர்கள் தம் சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சின்னம் ஒன்றினை உடனே உருவாக்குங்கள் என்றார்கள். கூட்டத்தில் தோழர்கள் துண் டேந்தியமைக்கு ஆதரவாக ரூபாய் 129-30 காசு வசூலாகியது.
தமிழ் நாடெங்கும் பகுத்தறி வாளர் கிளைகள் தொடங்கப் பட்டன. தொடக்கம் முதலே இந்த அமைப்பின் புரவலராக மானமிகு கி. வீரமணி அவர்கள் இருந்து வழி நடத்தி வருகிறார்.
பல மாநில மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் இருந்தபோது சென்னையில் வெகு சிறப்புடன் நடத்தப் பட்டது. (1972 மே 27), பகுத் தறிவுக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பாட்டரங்கம் படத் திறப்புகள் என்று பல வகையிலும் அறிவார்ந்த முறையில் நிகழ்ச் சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
கவுதமப் புத்தர் படத்தினை புரவலர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். இங்கர்சால், பெர்னாட்சா, கலிலியோ, ரசல் நேரு, டாக்டர் அம்பேத்கர் எம்.என். ராய், பிராட்லா, மா. சிங்காரவேலர் முதலிய உலகப் பகுத்தறிவாளர்கள் விஞ்ஞானி கள் படங்களையெல்லாம் அறி ஞர் பெரு மக்கள் திறந்து வைத்து அரிய உரைகளை நிகழ்த்தினர்.
அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் மாநாட்டுக்கு தலைமை வகிக்க, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.
தந்தை பெரியார் அவர்களே கலந்து கொண்டது தனிப் பெரும் சிறப்பாகும். 17 அரிய தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல 1980 டிசம்பர் 31-லும் 1981 சனவரி முதல் நாளிலும் சென்னைப் பெரியார் திடலில் இரு நாள்கள் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு தனிச் சிறப்பு மிக்கவை.
புரவலர் கி. வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டினை முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். மிஸ்கேட் தாம்சன் நெயில் கெய்டன் (இங்கிலாந்து) ஆகிய பரு மக்கள் எல்லாம் விழாவில் பங்கு கொண்டனர்.
அம்மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட 22 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடிய கருவூலங்களாகும்.
குறிப்பாக கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடு செய்ய வழி வகுக்கும் சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட் டம் ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்க வேண் டும் என்று தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 372 ஆவது பிரிவு ஜாதியைப் பாதுகாத்து நிற்பது பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளர் கழகங்கள் நாடெங்கும் கிளைகளை அமைத்து மக்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உருவாக் கியது.
ராஜாஜி அவர்களே மிரண்டு, அரசு ஊழியர்கள் பகுத்தறிவாளர் கழகம் என்ற பெயரால் மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரங்களைச் செய்யலாமா? என்று பொருமி எழுதினார் என்றால், பகுத்தறிவாளர் கழகத் தின் தாக்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
20.11.1970-இல் புதிவு செய்யப் பட்ட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தில் மிகப் பெரிய பதவி களில் இருந்தவர்கள் எல்லாம் பொறுப்பாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் பங்கு பெற்றனர்.
தமிழக சட்டப் பேரவைச் செயலாளரான கா.து. நடராசன் தலைவர்; அரசு செயலாளர் களாக இருந்த வி.என். சுப்பையா, க. திரவியம், ஏ. பத்மநாபன் (பிற்காலத்தில் மிசோரம் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றவர்) பேராசிரியர் சி.டி. ராஜேஸ்வரன் போன்ற பெரிய நிலையில் இருந்தவர்கள் எல்லாம் துணைத் தலைவர்களாகயிருந் தனர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புரவலராக இருந்தார் - இருக்கிறார்.
1976 நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டபோது அதிகார வர்க்கத்தில் இருந்த பார்ப் பனர்கள் இந்த அமைப்புக்கு ஆங்காங்கே தொல்லை கொடுத் தனர். இடையில் சிறிது காலம் தொய்வு ஏற்பட்டாலும் மீண்டும் எழுச்சி பெற்று அதன் பணி தொடர்கிறது.
இக்காலக் கட்டத்தில் அதன் பணிகள் புது முறுக்கோடு நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதற்கு அடையாளமாக இவ் வாண்டு தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் (24.12.2007) அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.
சென்னை பெரியார் திடலில் முற்பகல் நடந்த கருத்தரங்கமும் சரி, மாலையில் நடைபெற்ற பகுத்தறிவு அரங்கமும் சரி வெகு சிறப்பாக அமைந்திருந்தன.
மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு - என்று எல்லா வகையிலும் நேர்த்தியாக நிகழ்ச் சிகளை ஒழுங்குபடுத்தியிருந் தனர்.
பிற்பகல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பகுத்தறிவு இதழ்களைப் பரப்புதல், கருத் தரங்குகளை நடத்துதல், வெளி மாநிலத் தொடர்புகளை ஏற் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் உருவாக்கப்பட்டன. பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கு பெற்று கருத் துரைகளை வழங்கினார். வெகு சிறப்பாக செயல்படும் பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மதுரை வா. நேரு மாநிலப் பொதுச் செயலாளர் செயல்மிகு வீ. குமரேசன் ஆகியோரின் பணி களைப் பலபடப் பாராட்டினார்.
கருத்தரங்கம்
மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு அவர்கள் தலைமையில் நடை பெற்ற கருத்தரங்கில் சமூகச் சீரழிவிற்கு மிகுதியும் காரணமாக இருப்பது - சினிமா என்ற தலைப்பில் - இனமான கவிஞர் செ.வை.ர. சிகாமணி பத்திரிகை களே என்ற பொருளில் இனமான நடிகர் மு.அ. கிரிதரன், மதம் என்ற தலைப்பில் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், ஜாதி என்ற தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பாக உரை யாற்றினர்.
இந்த நாட்டைப் பீடித்த நோய்கள் அய்ந்து என்றும், பேய்கள் மூன்று என்றும் தந்தை பெரியார் கூறிய கருத்துகளை ஒட்டி ஆதாரப் பூர்வமாக எடுத்துரைத்தனர். குறிப்பாக சினிமாவும், ஏடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு எப்படி வக்கிர ஆட்டம் போடுகின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்கினர். ஜாதி மறுப்புத் திருமணத்தை ஈரோட்டில் பெரியார் சிலையின் கீழ் நின்று நடத்திக் கொண்ட எங்களுக்கு திராவிடர் கழகம்தான் அரவ ணைத்தது என்று தகடூர் தமிழ்ச்செல்வி உருக்கமுடன் கூறினார்.
தோழர் சி. மகேந்திரன்
நிறைவுரை ஆற்றிய இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன் உரை மிகவும் குறிப் பிடத்தக்கதாக அமைந்திருந்தது.
இந்த நாட்டில் இருக்கக் கூடிய எந்த அரசியல்வாதியும் தந்தை பெரியார் அவர்கள் கருத்தாக்கத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் அரசியல் நடத்த முடியாது; அப்படி நடத்த முயலப்படும் அரசியலும் கால் ஊன்றாது என்று உறுதிப்படக் கூறினார்.
பொதுவுடைமை என்பது அந்தந்த மண்ணுக்கேற்ப நடைபோட வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து சரியானதே - இந்தியாவில் சமூக வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும் தடைக் கற்களாக உள்ளவற்றை ஆராயுங்கால் மதம், ஜாதி என்ற கட்டுமானத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதனை மிகச் சரியாக இனங் கண்டு போராடி யவர் பெரியார். தந்தை பெரி யாருக்கும், பொதுவுடைமையா ளர்களுக்கும் இருந்த நெருக்கம் கொள்கை ரீதியானது என்று எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர்
மாலை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவரங்கத் திற்கு தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யேற்றார்.
ஒரு மருந்து கண்டுபிடிக் கப்பட்டால் அது எப்படி உலகுக்கே சொந்தமோ, அது போன்றதே தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் என்று கூறினார். மத வெறிச் சக்திகளை முறியடிக்கும் மகத்தான மாமருந்து தந்தை பெரியார் அவர் களின் சிந்தனைகளே என்று உறுதிப்படக் கூறினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தொடக்கவுரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வீ. கும ரேசன் வரவேற்புரையாற்றினர்.
இன்றைய கால கட்டத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள் தேவை குறித்து அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சேனல் இடமருகு அவர்களும், விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் அவர்களும் கருத்தாழ மிக்க முறையில் உரையாற்றினர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கடவுள் இல்லை என்ற கூறுகிற நூல்கள் லட்சக் கணக்கில் பரவுகின்றன. இத் தகைய கருத்துகளை தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இங்கே முழங்கி இருக்கிறார் என்றார் சேனல் இடமருகு.
டாக்டர் விஜயம் பேசுகையில்:
மூடநம்பிக்கையை விரட்ட மட்டுமல்ல; வறுமையை விரட்ட வும் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் தான் தேவை என்று அவர் தம் உரையில் அழுத்தம் கொடுத்தார்.
பெரியார் வலைக் காட்சி
உலகம் முழுவதும் உள்ள வர்கள் நேரிடையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் பெரியார் வலைக் காட்சியினைத் (ஞநசலையச றுநகூஏ) தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.
கவிஞர்களுக்கு பாராட்டு
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 75-ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி வெளி யிடப்பட்ட ``காலம் வெல்லும் குறுந்தகடு உருவாக்கத்திற்கு உறு துணையாக இருந்த பாடல் களை இயற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பாவலர் அறிவுமதி, பழநிபாரதி, கபிலன், யுகபாரதி, நா. முத்துக்குமார் மற்றும் இசையமைப்பாளர் கவி ஆகி யோர் கருத்தரங்க நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார். நூலை வெளியிட்டார்
தந்தை பெரியார் 34-ஆம் ஆண்டு நினைவு நாள் கருத் தரங்கையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ``சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் எனும் நூல் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கி அதிகாரி பால கிருஷ்ணன் தமிழில் இருந்து இந்தியில் மொழி பெயர்த் திருந்தார்.
ஆந்திர மாநிலம் நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் தமிழர் தலைவர் எழுதிய சேது சமுத்திரத் திட்டம் என்ற நூலினை வெளியிட்டார். உ.பி. மாநிலம் மகாசூத்ரா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் பலத்த கைதட்டல்களுக் கிடையே பெற்றுக் கொண்டனர்.
தந்தை பெரியார் நினைவு நாள் என்றால் அது ஏதோ சம்பிரதாயமானதல்ல - சிந் தனைப் பூர்வமானது - முன் னெடுத்துச் செல்ல வேண்டிய வற்றை முறைப்படுத்தும் ஒரு எழுச்சி நாள் என்ற வகையில் எல்லா நிகழ்ச்சிகளும் அமைந் திருந்தன.
கடந்த ஆண்டும்கூட அய்யா நினைவு நாளை பகுத்தறிவாளர் கழகம்தான் ஏற்பாடு செய் திருந்தது. மீண்டும் முறுக்கேறி பணிகளைத் தொடங்கி விட்டது பகுத்தறிவாளர் கழகம் என்ற நம்பிக்கையை சென்னை நிகழ்ச்சி உறுதிப்படுத்தியது.
இதன் தாக்கம் குமரி முதல் திருத்தணி வரை தொடர்ந்திட ஆவன செய்வார்களாக!

Sunday, April 20, 2008
பஞ்சாங்கம் பார்ப்போமா அறிவியல் அடிப்படையில்
பஞ்சாங்கம் பார்ப்போமா- அறிவியல் அடிப்படையில் (1) கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள். இணைய தளங்களிலே புலம்பித் தீர்க்கின்றார்கள். தினமணி நாளிதழுக்கு தகுந்த பதிலடி கொடுத்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பஞ்சாங்கம் பலவகை என்பதை எடுத்துக் காட்டி இருந்தார்கள். பஞ்சாங்கம் என்றால் என்ன வென்று பார்ப்போம்.
3 வகையான பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் வேறு- திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு எபிமெரிக் பஞ்சாங்கம் வேறு. அவர்களே சொல்கின் றார்கள் பாருங்கள்" திருக் கணிதம் கி.பி. 14-ஆம் நூற் றாண்டிற்குப் பிறகு ஏற்படுத் தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ...தோராய கணிதங்களுடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற் படுத்தப்பட்டது வாக்ய முறைக் கணிதமாகும் . சில துல்லியமான கணித அமைப்புடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது திருக்கணித மாகும் .
இரண்டு பஞ்சாங்கத்தில் உள்ள கோள்களின் அசைவுகள் ஒன்றுபோல் இருப்பது இல்லை. வாக்ய கணித முறையில் தயாரிக்கப் படும் அனைத்து விபரங்களும் திருக்கணித முறையுடன் இணைந்து செல்வதில்லை. ஆதலால் கோள்களின் மாற்றத்திலும் திசையின் இருப்பிலும் அதிகமான வித்தியாச அமைப்பு ஏற்படும். ஒரு பொழுதும் நவாம்சச் சக்கரம் இரண்டு கணித அமைப்பிற்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. இவ்வாறு இரண்டு பஞ்சாங்க நிலையும் வேறு பட்டு இருப்பது போல் எபிமெரிஸ் என்று சொல்லப் படுகிற பஞ்சாங்கங்களும் வேறுபட்டுள்ளது.
" ஒருவர் சொல்கின்றார். வாக்ய பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க ஸ்லோகங்கள் அடிப்படையில் உருவாக் கப்பட்டது . அதிலே சில தவறுகள் இருந்தன. அதைத் திருத்தி திருக்கணித பஞ்சாங்கத்தை உருவாக்கினர் .திருத்தப்பட்ட பஞ்சாங்கம் அதனால்தான் திருக்கணித பஞ்சாங்கம் என்கின்றார். ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படையே பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கம் பார்த்து தான் கோள்களின் இருப்பு, நட்சத்திரம் போன்றவை சொல்கின்றார்கள். புதிதாக ஜாதகம் கணிக்க பழகுபவர்கள் நான் எந்த பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்க எனக் கேட்டால் 3 வகையிலும் பழகுங்குகள், அனுபவத்தின் அடிப்படையில் எது சரியாக வருகின்றது எனப் பார்த்து அந்த முறையில் கணித்துக் கொள்ளுங்கள் என்கின்றார்கள் .
பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று குதியாய் குதிப்பவர்கள் எந்தப் பஞ்சாங்கம் சரியான பஞ்சாங்கம் என்று சொல்ல முன் வருவார்களா ?
பஞ்சாங்கம் மடத்தின் அடிப்படையில் பலவிதம் . . சிறீரெங்கம் பஞ்சாங்கம் , சிருங்கேரி மடம் பஞ்சாங்கம். சுத்த திருக்கணித பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம் , திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் ,பாம்பு பஞ்சாங்கம், யோக சேம பஞ் சாங்கம் இப்படி பலவிதமான பஞ்சாங்கங்கள். ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுகள் . எந்தப் பஞ்சாங்கம் இந்து மத பஞ் சாங்கம் - சொல்வார்களா?
பஞ்சாங்கம் மொழி அடிப் படையில் பலவிதம். தமிழ் பஞ்சாங்கம், தெலுங்கு பஞ்சாங்கம், பெங்காலி பஞ்சாங்கம், குஜராத் பஞ்சாங்கம் , மராத்தி பஞ்சாங்கம், ஹிந்தி பஞ்சாங்கம் .. ஒவ்வொரு மொழிக்கும் புத்தாண்டு தினம் வெவ்வேறு- அதனால் அதனோடு தொடர்பு படுத்தி சொல்லப் படும் பஞ்சாங்கம் வெவ்வேறு.இதில் எந்த மொழிப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் - சொல் வார்களா?
பஞ்சாங்கத்தில் சொல்லப் படும் வார்த்தைகள் பெரும் பாலும் சமஸ்கிருதத்தில். பெரிய பெரிய வாக்கியங்கள் - சில வாக்கியங்கள் 13 வரி , 15 வரி என. 19ம் நூற்றாண்டுத் தமிழ் நடையில் எழுதப்பட்டவை. ஏதோ தமிழர்கள் உட்கார்ந்து மொழியும் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் கர்நாடக சங்கீதம் கேட் பது போல் கேட்க முடியுமே தவிர என்ன சொல்கின்றார் கள், என்ன அர்த்தம் என்பதை முழுவதுமாக உணரமுடியுமா? "பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி" என்றார் புரட்சிக் கவிஞர்.
பஞ்சாங்க நூல்கள் அப்படிப் பட்டவைதான் . பஞ்ச+ அங்கம் (5 உறுப்புகள்) = பஞ்சாங்கம் என்கின்றார்கள். 5 உறுப்புகள் எவை என்றால் 1. திதி 2. வாரம் 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் என்கின்றனர் . நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களையும்,சூரியன் நகர்ந்து செல்வதாகக் நினைத்து இரண்டையும் இணைத்து ராசி என்பதை வெளிநாட்டினர் ஏற்படுத் தினர். இது சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை ஆகும். வேத ஜோதி டத்தில் சந்திரனை மையமாக வைத்து ராசிகளையும் நட் சத்திரங்களையும் குறித்தனர். இரண்டுமே கற்பனைப் பாதைகள். ஒரு எடுத்துக்காட்டிற்காகப் பார்த்தால், நெல்லை முதல் சென்னை வரை செல்லும் ரெயில் விரைவு வண்டிப்பாதையை சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை என வைத்துக் கொள்வோம். 12+27 இடங்களில் பேருந்து நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை நிற்பதாகக் கொள்ளுங்கள் . வெள்ளைக் காரன் ஏற்படுத்திய அதே 12 ராசிகளை சந்திரன் அடிப் படையில் ஏற்படுத்திக் கொண்டு, 27 நட்சத்திரங் களையும் ஏற்படுத்தியிருக்கின் றார்கள். இப்போது திதி என்றால் சந்திரன் செல்லும் கற்பனை ஜோடியாக் பாதையில் சந் திரன் நிலைக்கும் , சூரியன் செல்லும் கற்பனை ஜோடி யாக் பாதையில் சூரியன் நிலைக்கும் ஏற்படும் தூரத் தின் அளவு என்கின்றார்கள் .அதாவது சந்திரன் பாதை - சூரியனின் பாதை . நமது எடுத்துக்காட்டின்படி பேருந்து பாதை - ரயில் பாதை. இந்த கற்பனை தூரம் 360 பாகைகள் கொண்ட வட்டம் . 360 பாகையை ராசி கள் 12 ஆல் வகுத்து ஒவ் வொரு ராசிக்கும் 30 பாகை என ராசிக்கு சொன்னார்கள். இப்போது திதி 30 என வைத் துக்கொண்டு 360 பாகையை 30 ஆல் வகுத்து ஒவ்வொரு திதிக்கும் 12 பாகை எனச் சொல்லியிருக்கின்றார்கள். மாதந்தோறும் எல்லா நாட்டிலும் அமாவாசை பவுர்ணமி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் அமாவாசைக் கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட 30 நாளை 30 திதிகளாகப் பஞ்சாங்கத்தின் படி பிரித்திருக்கின்றார்கள். சந்திரன் என்பது துணைக் கோள். பூமியைச் சுற்றி வருகின்றது . தன்னைத் தானே சந்திரன் பூமியைப் போல் சுற்றிக் கொள்வதில்லை. பூமி யைச் சுற்றி வரும் சந்திரனின் ஒரு பகுதி பூமிக்குத் தெரிகின்றது. சூரியனின் ஒளி பூமியில் படுவது போல சந்திரனிலும் படுகின்றது. சந்திரனில் படும் சூரிய ஒளி பூமிக்குத் தெரிகின்றது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் விளைவாக சந்திரன் மறைவது போலவும், மீண்டும் தோன் றுவது போலவும் தோன்று கின்றது என்பது அறிவியல். அப்படித்தான் அமாவாசையும் பவுர்ணமியும் ஏற்படு கின்றது. பஞ்சாங்கத்தில் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்றால் வளர்பிறை(சுக்ல பட்சம்) , தேய்பிறை(கிருஷ்ண பட்சம்) என்று பிரித்திருக்கின்றார்கள். பிரித்தது மட்டுமல்ல, நல்ல காரியங்களை வளர் பிறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டார்கள். இது மட்டுமல்ல பிரதிமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடப்ப தற்கும் அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து 1வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம் ? அல்லது அதி லிருந்து 4வது நாள், 8-வது நாள், 9வது நாள், 14வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம்- .எப்படி விஞ்ஞானம்? பஞ் சாங்கம் ஏன் இந்த நாள்களில் நல்ல காரியங்கள் செய்யாதே என்கின்றது? .யார் தீர்மானித் தார்கள்? எப்படி தீர்மானித் தார்கள்? எதற்காக மாதத்தின் மூன்றில் ஒரு பாக நாளில் ஒன்றும் செய்யாதே எனத் தடுத்தார்கள் ? ஒரு பக்கம் ஜோதிடம் அறிவியல் எனச் சொல்லி விட்டு அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை நம்ப வைக்கத்தான் பஞ்சாங்கம்.
. பஞ்சாங்கம் பார்ப்பது என்பதை மனதளவில் தமிழர் களுக்கு ஊட்டி வைத்துள் ளார்கள். புது கார் வாங்க வேண்டுமா?,புது வீடு வாங்க வேண்டுமா? திருமணம் முடிக்க வேண்டுமா? வேலைக்கு மனுப் போட வேண்டுமா? வெளியூருக்குப் போக வேண்டுமா ? புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமா? எல்லாவற்றிக்கும் பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு கிளம்பு எனப் பழக்கப் படுத்தி வைத்துள்ளனர். கிழியட்டும் பழம்பஞ்சாங்கம் என்றார் புரட்சிக் கவிஞர். விஞ்ஞான முன்னேற்றத்தால் , பகுத்தறிவு வீச்சால் கிழிகின்ற பஞ்சாங்கங்களைப் பார்த்து மனம் பதறுகின்றனர் மதவாதிகள்.
-------------வா.நேரு

Subscribe to:
Posts (Atom)